முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அதியாவை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      விளையாட்டு
Athiya-Rahul 2023 01 23

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல். இவரும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. மராட்டியத்தில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்களின் இரு வீட்டார் மட்டும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். புதுமண தம்பதி கே.எல்.ராகுல் - அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

______________

ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர்: சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.

சானியா மற்றும் போபண்ணா ஜோடி இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

______________

ரிஷப் பந்த் நலம் பெற வேண்டி இந்திய வீரர்கள் பிரார்த்தனை

இந்திய கிரிக்கெட் அணி இன்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர்.

“ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தோம். அவரது கம்பேக் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பொறுத்த வரையில் தொடரை ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் நாம் வென்றுள்ளோம். இறுதிப் போட்டியை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்” என சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

________________

ஆஸி., ஓபனில் கவனம் ஈர்த்த தமிழக வீரர்கள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜிசெக் ஜோடியை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதேபோன்று இரட்டையர், கலப்பு இரட்டையர்கள் பிரிவிலும் முன்னணி ஜோடிகள் பங்கேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து