முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிக்கு 160 கி.மீ வேகம்: இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      தமிழகம்
Metro-train 2023 01 24

Source: provided

சென்னை : இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்பங்களில் புதிய வகையில் ரயில்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. தற்போது இந்தியாவின் அதிக வேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்க கூடிய RRTS என்று அழைக்கப்படும் Regional Rapid Transit System என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

இது இந்தியாவின் அதிக வேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இதை இயக்க முடியும். மெட்ரோ ரயில் போன்று, இதுவும் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சுரங்கம் வழியாக இயக்கப்படும்.

இதன்படி முதல் கட்ட ஆர்ஆர்டிஎஸ் திட்டம் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 82 கிமீ நீளத்திற்கு ரூ.30,274 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை தேசிய தலைநகர் பகுதியின் பிராந்திய போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்களும், 2 பனிமனைகளும் உள்ளன. இதில் 68.03 கி.மீ நிளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன்படி துஹாய் டிப்போ முதல் காசியாபாத் இடையே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார சோதனையை செய்ய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன்படி 17 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணித்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் முறையான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து