முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள்: உலக சாதனையை சமன் செய்த இந்திய வீரர் ஷுப்மன் கில்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      விளையாட்டு
Shubman-Gill 2023-01-18

Source: provided

மும்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில். 

72 பந்துகளில்... 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையல் நேற்று 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 5-வது ஒருநாள் சதம். கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை எடுத்துள்ளார். 

பாபர் ஆசமின்...

ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.  இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பாபர் ஆசாமின் சாதனையை சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில். இருவரும் தலா 360 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்கள்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

1) 360 - பாபர் ஆஸம் vs மே.இ. தீவுகள்.

1) 360 - ஷுப்மன் கில் vs நியூசிலாந்து.

2) 349 - இம்ருல் கைஸ் vs ஜிம்பாப்வே.

3) 342 - குயிண்டன் டி காக் vs இந்தியா.

4) 330 - மார்டின் கப்தில் vs இங்கிலாந்து.

அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்கள்

1) 360 - ஷுப்மன் கில் v நியூசிலாந்து, 2023.

2) 357 - விராட் கோலி, ஆசியக் கோப்பை, 2012.

3) 283 - ஷிகர் தவன் v இலங்கை, 2014.

4) 283 - விராட் கோலி v இலங்கை, 2023

5) 273 - ரோஹித் சர்மா v இலங்கை, 2014.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து