முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் ஓமலூரில் எடப்பாடி ஆலோசனை

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
EPS 2022 12 21

Source: provided

சேலம் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை நடத்தினார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். 

இதில் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கே.பி.அன்பழகன், பென்ஜமின், மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், மணி எம்.எல்.ஏ. உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து