முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதி: சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Nanjil-Sampad 2023 01 25

Source: provided

குமரி : நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனும், மருத்துவருமான சரத் பாஸ்கரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து  கேட்டறிந்தார்.

 சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அவர் பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். 

நாஞ்சில் சம்பத், சமீப காலமாக தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார். 

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவால் கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் ஆகியோரையும் தொடர்பு கொண்டு, நாஞ்சில் சம்பத்திற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து