முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழிப்போர் தியாகிகளுக்கு டுவிட்டரில் இ.பி.எஸ். மரியாதை

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
EPS 2023 01 25

Source: provided

சென்னை : அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் நேற்று அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, மாபெரும் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பதை உலகிற்கு எடுத்துரைத்து, அன்னைத் தமிழுக்காக தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மாவீரர்களான, மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீரவணக்கங்கள் என்று அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து