முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு: கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Stalin 2023 01-23

Source: provided

சென்னை : காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து