முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்தில் முகமது சிராஜ்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      விளையாட்டு
Mohammad-Siraj 2023 01 25

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார்.

பும்ராவிற்கு காயம்... 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கடந்த ஒருவருட காலமாக ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம்பெற முடியாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பலரால் கேள்வி எழுப்பப்பட்டது.

37 விக்கெட்கள்...

இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் இடம் பிடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்ட முகமது சிராஜ், இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிகவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறார். வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என சிறப்பாக விளையாடி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 28 வயதான முகமது சிராஜ் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

729 புள்ளிகளுடன்...

ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார். ஜோஷ் ஹேசில்வுட் 727 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து