முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்திய வீரர்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      விளையாட்டு
Rishabh-Pant 2023 01 25

Source: provided

2022-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் ஒரே இந்திய வீரராக ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் கவாஜா, லபுஷேன், கம்மின்ஸ், நாதன் லயன் என நான்கு ஆஸ்திரேலிய வீரர்களும் பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் என மூன்று இங்கிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணி - 1. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), 2. கிரைக் பிராத்வெயிட் (மே.இ. தீவுகள்), 3. லபுஷேன் (ஆஸ்திரேலியா), 4. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்), 5. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), 6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), 7. ரிஷப் பந்த் (இந்தியா), 8. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), 9. ரபாடா (தெ.ஆ.), 10. நாதன் லயன் (ஆஸ்திரேலியா) 11. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).

________________

மாதம் ரூ.1.30 லட்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முக்கிய பங்கு வகிக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது சமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

________________

சுப்மன் கில் கேட்ட கேள்விக்கு டிராவிட்டின் சுவாரஸ்ய பதில்

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும் தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி முடிந்தவுடன் தொடர் நாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதில் இந்தூர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார். அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

________________

மோசமான சாதனை படைத்த 3-வது நியூசி., பந்து வீச்சாளர்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து