முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகளை வழங்கும் அமெரிக்கா, ஜெர்மனி

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      உலகம்
Ukraine-army 2023 01 26

உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப் போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன. 

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப் போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்ட அறிவிப்பில், 

உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்து கொள்ளும் திறனை அதிகரிப்பதற்காகவும், அவர்களது இலக்குகளை அடைவதற்காகவும் இந்த பீரங்கிகள் உதவும் என்றும் ஜோபைடன் கூறியுள்ளார். 

மேலும் இது ரஷ்யாவிற்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்த அவர், ரஷ்ய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு திரும்ப சென்று விட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதே போல் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஷோல்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு ஒரு பட்டாலியன் பீரங்கிகளை வழங்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 14 லெப்பார்ட் 2 ஏ 6 வகை பீரங்கிகள் உக்ரைன் ராணுவத்திடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து