முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் குளிர், பயணிகள் குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
airport-2022-12-10

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்தில் கடுங்குளிர், பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சென்னை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் இரவு 10 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன. 

இதே போல் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இருந்து நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய 2 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 3.15 மணியளவில் கொழும்புக்கு திரும்பும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் கடுங்குளிர் மற்றும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் புறப்பாடு, வருகையில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், இரவு நேர கடுமையான குளிர் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அதனால் புறப்பாடு, வருகையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பெரிய ரக விமானங்கள். அதற்கு தகுந்த பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. எனவே ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து