முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப். 1-ல் மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி 20 மாநாடு கூட்டம் : சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
G20-Summit 2023 01 28

Source: provided

சென்னை : பிப்ரவரி மாதம் 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி 20 மாநாடு கூட்டம் நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எப்படி தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பது, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், எந்த மாதிரியான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி  கடந்த சில நாட்களுக்கு முன் மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தார். 

இந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து