முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
Mettur-Dam 2022 12 04

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று சனிக்கிழமை மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 896 கன அடியிலிருந்து வினாடிக்கு 933 கன அடியாக சற்று அதிகரித்திருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 104.21அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று சனிக்கிழமை காலை 103.87 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 79.94 டி.எம்.சியாக இருந்தது. 

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து