முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்ப்பதாக புகார்: மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் திரையரங்கில் வெளியாகும் படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பல திரையரங்குகளில் வயது வந்தோருக்கு மட்டுமான 'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை திரையிடும் போது, அங்கு சிறுவர்களையும் அனுமதிப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய தணிக்கை வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கார்ட்டூன் படங்களைக் கூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக் கூடாது என விதி உள்ளதாகவும், ஆனால் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து