முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி: சீரம் நிறுவனம் தயாரிப்பு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      இந்தியா
Serum 2023 01 28

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோயால் 75 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து, 'செர்வாவேக்' என்ற பெயரில் சீரம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 200 ரூபாய் முதல் 400 ரூபாய் மதிப்பில் சீரம் நிறுவனம் தடுப்பூசியை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து