முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
Ma-Suphramanian 2023 01 28

Source: provided

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சர் மனைவியின் தாயார் கன்னியாகுமரிக்கு யாத்திரைக்காக வந்த நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்று நேற்று (ஜன.28) சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இவரையும் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உ.பி அமைச்சரிடம் போனில் தொடல்பு கொண்டு இரண்டு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்க, அதற்கு உ.பி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து