முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு விமானநிலையத்தை சுற்றி இறைச்சி விற்பதற்கு தடை : ஏரோ இந்தியா கண்காட்சியை முன்னிட்டு நடவடிக்கை

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      இந்தியா
Bangalore 2023 01 28

Source: provided

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் "ஏரோ இந்தியா 2023" கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, யலஹங்கா விமானநிலையத்திலிருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு இறைச்சி, அசைவ உணவு விற்பனை செய்ய தடைவிதித்து, ப்ரூஹட் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானநிலையத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 14 வது "ஏரோ இந்தியா 2023" கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி கடைகளை மூடவேண்டும் என்று பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிபிஎம்பி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் ஜன. 30 முதல் பிப். 20 வரை யலஹங்கா விமானநிலையதையெட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும் அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுதிறது என்று பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த உத்தரவினை மீறுவர்கள் மீது பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய வினமானச்சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைகுறித்து பிபிஎம்பி அதிகாரிகள் கூறுகையில், "பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ண இயற்கையின் தூய்மை பணியாளர்களான கழுகு போன்ற பறவைகள் வருகின்றன. இதனால் வானில் வட்டமிட்டுபறக்கும் அதுபோன்ற பறவைகள் விமானங்களில் மோதி பாதிப்புகளை ஏற்றபடுத்த கூடும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது" என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து