முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகளை ஏற்றிச்செல்வதில் அலட்சியம்: கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்..!

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      இந்தியா
Go-Furst 2023 01 28

Source: provided

புதுடெல்லி : இம்மாதம் 9-ம் தேதி, பெங்களூரிலிருந்து டெல்லிக்குச் சென்ற கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிச் செல்ல தவறியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துக் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறுகையில், “கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுப்பிய பதிலிலிருந்து அந்நிறுவனம் பயணிகளை ஏற்றுவதில் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்பது தெரிகிறது. பயணிகளை ஏற்றுவதிலும், பயணிகளின் லக்கேஜ்களை நிர்வகிப்பதிலும் போதிய ஏற்பாட்டை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் செய்யவில்லை. இந்த விதிமீறலால் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து