முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் அம்ரித் உதயான் என மாற்றம் : மக்கள் பார்வைக்கு இன்று திறப்பு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      இந்தியா
Murmu 2022-11-18

Source: provided

டெல்லி : டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-வைத்து ஆண்டு விழாவை அம்ரித் மகோத்சவ் என்று மத்திய அரசு கொண்டாடி வருகிறது.  

அம்ரித் மகோத்சவின் ஓர் அங்கமாக முக்கால் கார்டனின் பெயர் அம்ரித் உதயான் என மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அம்ரித் உதயான் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று திறந்து வைக்கவுள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கால் தோட்டத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மத ரீதியாக சமூகத்தை பிரிக்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெயர் மாற்றத்தின் மூலம் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வை விதைப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து