முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Modi 2023 01 27

Source: provided

புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - ஜனநாயகத்தின் தாய் என்ற புத்தகம் குறித்து குறிப்பிட்டார். அதில், ஆர்வத்தை  தூண்டக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், மிகச் சிறந்த கட்டுரைகளை அந்த புத்தகம் கொண்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் நமது நரம்புகளில், நமது கலாச்சாரத்தில், நாம் மேற்கொள்ளும் பணிகளில் ஜனநாயகம் உள்ளது. இந்திய சமூகம் இயற்கையாகவே ஜனநாயக சமூகம். புத்தமத துறவிகளின் சங்கத்தோடு இந்திய நாடாளுமன்றத்தை அம்பேத்கர் ஒப்பிட்டுள்ளார். 

தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1100-1200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கல்வெட்டு.  உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடியது இது என பிரதமர் தெரிவித்தார். 

மேலும் இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியல் சாசனம் என்றும் இதே போல், 12-ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் கட்டப்பட்ட பசவேஸ்வரா ஆலயத்தில் அனுபவ மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளதையும், எவர் ஒருவரும் தனது அனுபவத்தை எவ்வித தயக்கமும் இன்றி கூறுவதற்காக இது கட்டப்பட்டது என்பதையும் தெரிவித்த பிரதமர், இந்த மண்டபத்தில் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். 

சிறுதானியங்களின் பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகள் இதனால் மிகப் பெரிய உற்சாகமடைந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். 

மேலும் சமூக ஊடகம் ஒன்றில் காஷ்மீரை குறிப்பிட்டு எழுதிய ஒருவர், இந்த சொர்க்கத்தை விட வேறு எது அழகாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, அவர் கூறியது உண்மைதான் என்றும் அதனால்தான் காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என வர்ணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து