முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Anbil-Mahesh 2023 01 30

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வாகவும் நடத்தப்படும். இந்நிலையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2023-ம்ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த அட்டவணையின்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். பிளஸ் 1 மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதுபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

செய்முறை தேர்வு தேதி மாற்றம்

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து