முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்கும் வசதி : தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்தது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Power 2022 10 13

Source: provided

சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ஆம் தேதி முதல் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற   இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

ஆதார் எண்ணை இணைக்க டிச.31 கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.31) ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பணிக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின் வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் கைப்பேசி எண்ணை மின் நுகர்வோர் கொடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து