முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை ரூ.ஆயிரத்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லையாம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Rupees 2021 12-05

Source: provided

சென்னை : தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ. ஆயிரத்தை 4.40 லட்சம் பேர் இதுவரை வாங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து