முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்: அனைத்து பகுதிகளிலும் காலை உணவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் : வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
CM-2 2023 02 01

Source: provided

வேலூர் : கல்வியும், மருத்துவமும் இரு கண்களாக பாவித்து வருவதாகவும், அனைத்து பகுதிகளிலும் விரைவில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

வேலூர் மாவட்டம், காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2400 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாழடைந்து இருக்கக்கூடிய பள்ளிக் கட்டடங்களை பழுதாகிப் போயிருக்கக்கூடிய வகுப்பறைகளை சீர்செய்திட வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு நம்முடைய அரசு ஒதுக்கியிருக்கக்கூடிய தொகை 2400 கோடி ரூபாய். 

அரசைப் பொறுத்தவரைக்கும் கல்வியை, மருத்துவத்தை இரண்டு கண்களாக நாங்கள் பாவித்து அதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.   மதிய உணவுத் திட்டத்தை அரசின் சார்பில் நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோமோ, அதே போல் காலை உணவு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அதேபோலத்தான் பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்த நிலையில், வகுப்பறைகள் இல்லாத வகையில் மரத்தடி நிழல்களில் உட்கார வைத்து அதில் வகுப்புகள் நடத்தக் கூடிய அந்த காட்சிகளையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும், அந்த மாணவர்கள் வசதியாக நல்லவித அடிப்படை வசதிகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய சிந்தனைகள் அந்தக் கல்வியை போய் சேர முடியும் என்பதை சிந்தித்து, அதற்குப் பிறகு இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்திருக்கிறோம். அதற்காக 2400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனவே இதன் மூலமாக பாழடைந்திருக்க கூடிய, அந்த பள்ளிகளெல்லாம் இன்றைக்கு மேம்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்.  இதை நல்ல வகையில், அந்தந்த பகுதியிலே இருக்கக்கூடிய அந்தந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து