முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் பேனா நினைவுச் சின்னம் : பொதுப்பணித்துறை விளக்கம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
Pen-1 2022-12-30

Source: provided

சென்னை : பேனா நினைவுச் சின்னம் பேரிடர்களை முன்னறிவதற்கான கருவிகளுடன் அமையவுள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ. 81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. 

இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக பொதுப்பணித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து