முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் : போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தகவல்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
Shankar-Jiwal 2023 02 01

Source: provided

சென்னை : சென்னையில் பெண் போலீசார் தங்குவதற்கு விடுதி ஒன்று கட்டித்தருமாறு முதல்வரிடம்  கோரிக்கை வைக்கப்படும், என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார். 

சென்னை மாநகர காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அனைத்து பெண் போலீசாருக்கும் ஆனந்தம் என்ற பெயரில் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

அதன் பேரில் பணியிலும், சொந்த வாழ்க்கை முறையிலும் வெற்றி பெறும் வகையில் கடந்த ஒரு ஆண்டாக முதல் கட்ட பயிற்சி நடந்தது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் இந்த சிறப்பு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல் கட்ட பயிற்சி முடிந்து விட்ட நிலையில் 2-வது கட்ட பயிற்சி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. 

முதல் கட்ட பயிற்சியின் முதலாம் ஆண்டு விழாவும், 2-வது கட்ட பயிற்சியின் தொடக்க விழாவும் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்,  2-வது கட்ட பயிற்சி முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், 

பெண் போலீசார் தங்களது பணியிலும், சொந்த வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட இந்த பயிற்சி பயன் உள்ளதாக இருக்கிறது. பெண் போலீசார் தாங்கள் வாங்கும் சம்பளத்தை செலவிட்டு விடுவதாக சொல்கிறார்கள். அவர்களது சம்பளத்தில் சேமிப்பு இருக்க வேண்டும். இதற்கு நிதி மேலாண்மை பற்றி அவர்களுக்கு பயிற்சியில் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். 

மேலும் பெண் போலீசார் திருமணமாவதற்கு முன்பு தங்குவதற்கு வீடு போன்ற வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே வரும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, சென்னையில் 200 பேர் அல்லது 400 பேர் தங்கும் அளவுக்கு பெண் போலீசாருக்கு விடுதி ஒன்றை கட்டித் தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். 

விளையாட்டில் சிறந்து விளங்கும் பெண் போலீசாருக்கு போதிய பயிற்சி கிடைப்பதில்லை. எனவே உரிய பயிற்சியாளர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து