முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி முதல்கட்ட தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Exam 20221 02 02

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது. இந்த தேர்வுகள் முதற்கட்டமாக இன்று 3-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி  நியமனம் பெற தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு, தற்போது இரண்டாம் தாளுக்கான தேதியை அறிவித்தது. 

இந்த தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கி 12-ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணை  ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட்டுகள் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதில் மாவட்ட வாரியாக தேர்வு மையங்கள், தேர்வு குறித்த விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நபர்கள் தேர்வுக்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான www.trb.tn.nic.in ல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது. இந்த தேர்வுகள் முதற்கட்டமாக இன்று 3-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரையும் இரண்டாம் கட்டமாக 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. 

ஒவ்வொரு நாளும் காலை மதியம் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து