முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட், ஒருநாள், டி-20 என 3 பார்மெட்டிலும் பல சாதனைகளை படைத்த இளம் வீரர் ஷுப்மன் கில்..!

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      விளையாட்டு
2-Ram-50

Source: provided

அகமதாபாத்: ஷுப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார்.

இந்தியா வெற்றி...

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அசத்தினார் ஷுப்மன் கில். டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.  2023 தொடங்கிய 1 மாதம் 1 நாளில் 3 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார். 

கில்லின் சாதனைகள்...

* யு19 உலகக் கோப்பையை வென்றுள்ளார். (2018-ல்).

* 2021-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். (பிரிஸ்பேனில் 2-வது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்தார்.)

* ஐபிஎல் போட்டியை வென்றுள்ளார். (2022-ல் குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. ஷுப்மன் கில், 16 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 483 ரன்கள் எடுத்தார்.).

* டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ரன்கள். (இதற்கு முன்பு விராட் கோலி 122 ரன்கள் எடுத்திருந்தார். அதை நேற்று முறியடித்தார் கில்.).

* யு-19 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் சதமடித்துள்ளார்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம்.

* டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் - கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, ஷுப்மன் கில். 

* ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்ட், டி20யில் 100 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் - ரோஹித் சர்மா, ஷுப்மன் கில். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து