முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு மத்தியப்படை வருகை: தேர்தல் ஆணையர் சாகு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
Satyapratha-Sagu 2022-12-30

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் மத்திய ஆயுதப்படை காவல் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து