முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.14 லட்சம் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Erode 2023 01 22

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 3 வகையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நேற்று வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.30 ஆயிரத்து 610 மதிப்பிலான மதுபானம், ரூ.4 ஆயிரத்து 800 மதிப்பிலான 300 கிராம் கஞ்சா, ரூ.163 மதிப்பிலான புகையிலை பொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, பணம் மற்றும் பிற பொருட்கள் என ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 413 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து