முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுனுக்கு ரூ. 240 உயர்ந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. 

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத வகையில் கடந்த 2-ம்தேதி ரூ. 44 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது. 

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,335 ஆகவும், பவுன் ரூ. 42,680 ஆகவும் இருந்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365 ஆக இருந்தது. பவுனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ. 42,920 ஆக விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74 ஆகவும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரமாகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து