முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்ரூத் திட்டத்தின் கீழ் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் நிருவாக மற்றும் அலுவலக செலவு நிதியின் கீழ் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தலைமையகத்தில், அர்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டமைப்புகளின் தகவல்கள் உயர் துல்லியத்துடன் உருவாக்கப்படும் மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்கள் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை கொண்டு பணிகளை திட்டமிடல், பொது சேவை வசதிகள், அன்றாட தகவல்களை மேம்படுத்த இயலும். இத்திட்டச் செயலாக்கம், வாரியத்தின் வருவாயை மேம்படுத்தவும், செலவினங்களை குறைக்கவும் ஏதுவாக அமையும். இவ்வாறு நகராட்சி நிர்வாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து