முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சுப்பிரமணியன் 5 நாள் ஜப்பான் பயணம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றார். புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். 

முன்னதாக இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- 

புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய முன்னோடி நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் பின்பற்றும் சிகிச்சை நெறிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 - 80,000 புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

எனவே, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பை அறிய சுகாதாரத்துறை குழு ஜப்பான் செல்கிறது.

ஜப்பானில் புற்றுநோய் மேலாண்மையை கண்காணித்து தமிழகத்தில் சிகிச்சை திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவி வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து