முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது சில நேரங்களில் மன உளைச்சலாக இருந்தது : மனம் திறந்த ரவீந்திர ஜடேஜா

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      விளையாட்டு
Jadeja 2023 02 06

Source: provided

நாக்பூர் : அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது சில நேரங்களில் மன உளைச்சலாக இருந்தது என்று ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மனம்திறந்து கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 5 மாதத்திற்கு பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். இந்தப் பயணத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன், நீங்கள் 5 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையென்றால் உங்களது மனநிலை எப்போது மீண்டும் அணிக்காக விளையாடப் போகிறோம் என்ற கவலையில் இருக்கும். நான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கடினமாக உணர்ந்தேன்.

மீண்டும் இந்திய ஜெர்சியினை அணிந்து விளையாட வேண்டும் என்ற உந்துதல் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்தது. டி 20 உலகக்கோப்பைக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? அல்லது முன்னர் செய்து கொள்ளலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டி 20 உலகக்கோப்பையில் நான் இடம்பெறுவதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக உணர்ந்தேன். ஆகையால் காலம் தாழ்த்தாமல் விரைவாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். அதன்படி செய்துகொண்டு தொடர்ந்து சிகிச்சை மற்றும் பயிற்சி மட்டுமே செய்து வந்தேன்.உலகக்கோப்பை போட்டிகளை டிவியில் பார்க்கும் பொழுது நான் அங்கு இருக்க ஆசைப்பட்டேன். மிகவும் வருத்தம் அளித்தது. சில நேரங்களில் மன உளைச்சல் ஆகவும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து