முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்த என்.ஆர்.ஐ.க்கள் 16 லட்சம் பேர்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : கடந்த 12 ஆண்டுகளில் 16 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது, ''கடந்த 2011ல் இருந்து இதுவரை 16 லட்சத்து 63 ஆயிரத்து 440 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டனர். குறைந்தபட்சமாக கடந்த 2020-ல் 85,256 பேரும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 2 லட்சத்து 25,620 பேரும் குடியுரிமையை துறந்துவிட்டனர்.

2011-ல் 1,22,819 பேரும், 2012-ல்1,20,923 பேரும், 2013-ல் 1,31,405 பேரும், 2014-ல் 1,29,328 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர். 2015-ல் 1,31,489 பேரும், 2016-ல் 1,41,603 பேரும், 2017-ல் 1,33,049 பேரும் குடியுரிமையை வேண்டாம் என்று துறந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2018-ல் 1,34,561 ஆகவும், 2019-ல் 1,44,017 ஆகவும், 2020-ல் 85,256 ஆகவும், 2021-ல் 1,63,370 ஆகவும், 2022ல் 2,25,620 ஆகவும் இருந்துள்ளது. இவர்கள் 135 வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டதை அடுத்து அவர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்'' என ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து