முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரங்கிமலை தர்ஹாவில் சந்தன குடம் சுமந்த ஏ.ஆர்.ரகுமான்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      சினிமா
AR-Rahman 2023 03 19

Source: provided

சென்னை : பரங்கிமலை தர்ஹாவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டு சந்தன குடம் சுமந்தார். 

சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள 658 வருட பழமையான ஹசரத் சையத் ஷா அலி மஸ்தான் தர்ஹாவின் 139-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா  நடந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றது. 

இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 

அதிகாலை 4 மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மகன் அமீனுடன் தலையில் சந்தன குடத்தை சுமந்து வந்தார். பின்னர் தர்காவில் சந்தனம் சார்த்தும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து