முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2023      தமிழகம்
Weather-Center 2021 12-05

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் தகித்து வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூரில் வரும் 30ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் உள்ள வளிமண்டல பகுதிகளில் உள்ள கிழடுக்குகளில் கிழக்கு விசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து