முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு

புதன்கிழமை, 17 மே 2023      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தேமாலை  உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு நாளை(மே.18) காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10  மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதை பக்தா்கள் இலவசமாக தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து, அங்கபிரதட்சண சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து