முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டி - அம்பத்தூர் - சேலத்தில் 364 அடுக்குமாடி தொழிற்கூடங்கள் விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Anbarasan 2023 04 05

Source: provided

சென்னை: ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கிண்டி, அம்பத்தூர், சேலத்தில் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக  அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

சென்னையில் ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நிலையான கிளஸ்டர் மேம்பாடு குறித்து விவாதிக்க நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- 

பெரும் தொழிற்சாலைகளே ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற நிலை மாறி தற்போது எம்.எஸ்.எம்.இ. தொழில்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு, 49 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. 

குறிப்பாக ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 சதவீதம், காலணி ஏற்றுமதியில் 45 சதவீதம், மின்னணு இயந்திரங்கள் மின்னணு சாதனங்களில் 25 சதவீதம் என பல்வேறு துறைகளில் தமிழகம்  தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. 

புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதிய நிலம் இல்லாத காரணத்தினாலும், நிலத்திற்கான முதலீட்டினை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிண்டியில் ரூ. 90.13 கோடியில் 152 தொழில் கூடங்கள், அம்பத்தூரில் ரூ. 60.55 கோடியில் 112 தொழில் கூடங்கள், சேலத்தில் ரூ. 24.50 கோடியில் 100 தொழில் கூடங்கள் என மொத்தம், ரூ. 175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து