முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, பிரனோய், ஸ்ரீகாந்த்

வியாழக்கிழமை, 25 மே 2023      விளையாட்டு
25-Ram-58-1

Source: provided

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் 9-வது இடத்தில் இருக்கும் பிரனோய், உலகின் 11-ம் நிலை வீரரான லியை 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 16-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஓஹோரியை 16-21, 11-21 என்ற கணக்கில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடந்தது. இதன் மூலம் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரணாய் பெண்கள் பிரிவில் பிவி சிந்து ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

________________

இம்பேக்ட் பிளேயர் விதி டோனிக்கு

சாதகமாகவே இருக்கும்: பிராவோ

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து டோனி கூறுகையில், மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், டோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

________________

இந்திய கிரிக்கெட் அணிக்கான 

புதிய பயிற்சி ஜெர்சி வெளியீடு

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. 

இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள் , பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

________________

நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த 

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எலிமினேட்டர் போட்டியில் வெளியேற்றி உள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில், மாம்பழங்களுடன் போஸ் கொடுத்து நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். இந்தப் படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த படத்தில் மேசையில் மூன்று மாம்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேசையை சுற்றி மும்பை அணி வீரர்களான விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கண்களையும், மற்றொருவர் வாயையும், மற்றொருவர் காதையும் மூடி இருப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். ‘மாம்பழங்களின் இனிதான பருவம்’ என இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் சந்தீப்.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து