முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் : வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      விளையாட்டு
Harsha-Bhogle 2023-05-26

Source: provided

அகமதாபாத் : இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா பார்க்கப்படுகிறார். இந்த சீசனின் சிறந்த டெத் பவுலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இளம் வீரரான பதிரனாவின் இந்த எழுச்சிக்கு டோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷூகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்று தல டோனி கூறியபோது மல்லி பாதுகாப்பான கைகளில் இருப்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதையும் தாண்டியது, எனக் கூறியிருக்கிறார். இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து