முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      சினிமா
Kaluvetti-murkkan vimarcanam

Source: provided

அருள்நிதி நடிப்பில் அம்பேத்குமார் தயாரிப்பில் சை.கெளதம ராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தில் அருள்நிதியுடன், சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை டி.இமான்.  கதை, இரு வேறு சாதியைச் சேர்ந்த அருள்நிதியும், சந்தோஷ் பிரதாபும் நெருங்கிய நண்பர்கள். உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் சந்தோஷ் பிரதாப்பை தள்ளி வைக்கின்றனர். ஆனால் அருள்நிதி, நண்பனுக்காக எப்போதும் துணை நிற்கிறார். தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த சந்தோஷ் பிரதாப் சிலரால் கொல்லப்படுகிறார். அந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. கொலைப்பழியிலிருந்து அருள் நிதி தப்பித்தாரா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். எதார்த்த நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் அருள்நிதி. அழகாக வந்து அசத்திவிட்டு போகிறார் துஷாரா.. சாதி ஆதிக்கமும், பதவி அரசியலும் என்னவெல்லாம் செய்கிறது என்பதையும், சமூகத்தில் என்ன ஏற்றத்தாழ்வு இருந்தாலும், கல்வி மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பதையும் திரைக்கதை ஓட்டத்துடன் சொல்லியிருக்கும் இயக்குனர் கெளதம ராஜுக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து