முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு: 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றது

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
Adenum 2023 05 27

Source: provided

சென்னை : புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக 20 பேர் கொண்ட ஆதீனம் குழு சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளது. 

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய பாராளுமன்றம் ரூ. 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். 

இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று 28-ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து புது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமரிடம் செங்கோலை ஆதீனம் குழு பரிசாக வழங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து