முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்: ஓ.பி.எஸ். வரவேற்பு

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
OPS 2022 12 29

சென்னை, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து முன்னாள்  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழகத்தின்  பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

புதிய பாராளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. 

இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி, தமிழகத்திற்கும்,  தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து