முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமுகம் கவிதா இயக்கும் ஆதாரம்

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Kavita 2023-05-29

Source: provided

MATINEE FOLKS சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் புதுமுகம் கவிதா இயக்கத்தில், அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ஆதாரம்.. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், கவிதா அவர்களின் தந்தை TN பாலு படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது எனது முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன் அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும் என்றார். பின்னர் இயக்குநர் கவிதா பேசுகையில், இந்த படம் சிசிடிவி பற்றியதல்ல, ஆனால், மறைக்கப்பட்ட உண்மையைப் பற்றியது. இப்பபடம் வெளியாகும் போது பல உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து