முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: மணிப்பூர் விரைந்தார் அமித்ஷா

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
amit-shah 2022-12-01

Source: provided

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையை அடுத்து துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலியாயினர். இதைதொடர்ந்து அங்கு நிலைமையை கண்காணிக்க மணிப்பூர் விரைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

நூற்றுக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. என்றாலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சார்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.

அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது. இதில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) மேலும் 2 பேர் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் 7 ஆயுத கிட்டங்கிகள் உள்ளன. போலீசாருக்கான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் 3 கிட்டங்கிகளில் புகுந்து ஆயுதங்களை சூறையாடினார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அள்ளி சென்றனர். இதனால் மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது. குகி இன போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் துணையுடன் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். கடந்த 2 தினங்களாக போராட்டம் மற்றும் தாக்குதலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 கிராம மக்கள் முற்றிலுமாக வீடுகளை இழந்துள்ளனர். குகி இன போராட்டக்காரர்கள் எம்.16 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

நிலைமை கட்டுமீறி போவதால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மணிப்பூர் சென்றார். அவர் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை அவர்களை வேட்டையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து