முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 மறு கூட்டல்: அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
TN 2023-05-09

Source: provided

 சென்னை : பிளஸ் 2 மறுகூட்டலுக்கான விண்ணப்ப படிவங்களை இன்று பிற்பகல் முதல் ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்-2) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை நேற்று 30-ம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் - அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து இன்று 31-ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்தவேண்டும். 

மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505-ம், மறுகூட்டல்- உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305-ம் ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205-ம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து