முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15-ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Murmu 2023-05-30

Source: provided

சென்னை : சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதல் கட்டடமான ‘ஏ’ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ‘பி’ பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டடமான ‘சி’ பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ஆம் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிறகு, ஜூன் 15-ஆம் தேதி கிண்டி மருத்துவமனையை திறந்துவைக்க தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், திறப்பு விழா தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஓரிரு நாள்களில் தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து