முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
Elon-Musk 2023 03 28

வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். 

எலோன் மஸ்க் தனது ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக் காரான டெஸ்லாவினை தயாரித்தார். கார் வெளியான சில நாள்களிலே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்

பின்னர் எல்.வி.எம். ஹெச்-ன் பங்குகள் எகிறியதால் அதன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், எலோன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார். ஆனால் தற்போது எல்.வி.எம். ஹெச்-ன் பங்குகள் 2.6 சதவிதம் சரிந்துள்ளது. அதாவது அதன் சந்தை மதிப்பு ஏறக்குறைய 10 சதவிதம் குறைந்துள்ளதாக தெரிகிறது. 

 இது அவரின் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாம் இடத்தில் இருந்த எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். இதனிடையில் சில மாதங்கள் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸூம் உலகின் பணக்காரர் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து