எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒடிசா ரயில் விபத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி:-
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் ,
அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும், இந்த கோர ரயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.
அண்ணாமலை:-
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.
ராமதாஸ்:-
ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா தொடர்வண்டி நிலையத்தில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமாவளவன்:-
கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ள தகவல் பேரதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமுற்றவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும். ஒடிசா மாநிலத்தில் இவ்விபத்து நடந்திருக்கும் நிலையில் அம்மாநில அரசுடன் நமது தமிழ்நாடு அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது.
அன்புமணி:-
ஒடிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒரே இடத்தில் தடம் புரண்டு மோதிக்கொண்ட விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஒடிசா இரயில் விபத்தில் பலியான பயணிகள் எத்தனை திட்டங்களோடும், கனவுகளோடும் பயணித்திருப்பார்கள். அந்தத் திட்டங்களும், கனவுகளும் தவிடுபொடியாகி விட்டனவே!
கொடிய இரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு என் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக தெரிவித்துக்கொள்கின்றேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும். காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம்பெற வேண்டுமென இயற்கையை வேண்டுகிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சியையும், பெரும் கவலையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயம் அடைந்திருப்போருக்கும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாகச் சிகிச்சைகள் நடைபெற்று வருவது ஆறுதலானது. அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வர நம்முடைய விழைவை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீட்புப் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்துவதுடன், விபத்துக்கான காரணத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை களுக்கும், இனி இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கும் ஆவன செய்ய வேண்டும்.
உடனடியாக ஒடிசா மாநில முதல்வரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தேவைப்படும் உதவிகளைத் தமிழக அரசு செய்யும் என்று அறிவித்திருப்பதும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தலைமையிலான குழுவை உடனடியாக அனுப்பியிருப்பதும் ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.
இன்று (3.5.2023) கொண்டாடப்படவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, இன்று ஒரு நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் துக்கம் கடைப் பிடிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளமாகும்.
கமல்ஹாசன், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 1 day 12 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 5 days 6 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 2 days ago |
-
பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
24 Sep 2023திருவனந்தபுரம் : பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
-
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
24 Sep 2023திருப்பதி : திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அதிபர் ஜோபைடன் : வெள்ளை மாளிகை தகவல்
24 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.
-
கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் இன்று முதல் மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட கலெக
-
சட்டவிரோத பணிகளை செய்ய விரும்பாததால் பதவி விலகிய ட்ரூடோவின் பாதுகாப்பு குழு அதிகாரி
24 Sep 2023டொரண்டோ : சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் கனடா பிரதமரின் பாதுகாப்புக் குழு பணியை ராஜினாமா செய்வதாக கார்போரல் புல்போர்ட் கூறியுள்ளார்.
-
சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
24 Sep 2023சென்னை : சென்னை இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
-
சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது நல்ல முடிவு : இங்கிலாந்து பிரதமருக்கு டிரம்ப் பாராட்டு
24 Sep 2023வாஷிங்டன் : சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
-
2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9,000 கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டம்
24 Sep 2023திருவனந்தபுரம் : வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9 ஆயிரம் கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
24 Sep 2023புதுடெல்லி : தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம் : கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
24 Sep 2023பெங்களூரு : காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் நடந்ததை போன்று பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக நீர் பாதுகாப்பு அமை
-
சந்திராயனின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
24 Sep 2023பெங்களூரு : சந்திராயன் - 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
-
சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி
24 Sep 2023பெலிட்வி : சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 போலீசார் உட்பட 15 பேர் பலியானார்கள்.
-
பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கும் ரஷ்யா : வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்
24 Sep 2023மாஸ்கோ : தன் நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு ரஷ்யா போர் பயிற்சி அளித்து வருவதாக வெளியான தகவலையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் ரஷ்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த கவர்னர் தமிழிசை
24 Sep 2023திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கலந்து கொண்ட புதுவை கவர்னர் தமிழிசை அந்த ரயிலில் ஏறி
-
தெலுங்கானாவில் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : மாநில தேர்தல் அதிகாரி தகவல்
24 Sep 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் அடுத்த 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
-
புறாக்களை பராமரிக்கும் பணி: சென்னை ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத்தில் பிரதமர் பாராட்டு
24 Sep 2023சென்னை : புறாக்களை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.&nbs
-
90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
24 Sep 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-09-2023
24 Sep 2023 -
வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது : ராகுலுக்கு கம்யூனிஸ்டு எதிர்ப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக். 5 வரை நீட்டிப்பு
24 Sep 2023விஜயவாடா : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மையம் : விரைவில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2023சென்னை : பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
-
வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக்கூடாது : காங்கேயம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
24 Sep 2023திருப்பூர் : வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
24 Sep 2023சென்னை : 5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் : கவர்னர் தமிழிசை புகழாரம்
24 Sep 2023நெல்லை : நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லை சென்றிருந்தா
-
9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் : கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
24 Sep 2023பெங்களூரு : கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.